தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு அரசை சமர்ப்பித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிவாரண தொகையை வழங்குவதற்கான டோக்கனை முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதன்படி டிசம்பர் 16ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.