
இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை விட தபால் அலுவலக திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் கிராம சுரக்ஷா யோஜனா என்பது தபால் அலுவலகத்தால் தொடங்கப்பட்ட கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு நாளும் 50 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது 35 லட்சம் ரூபாய் தொகையை பெறலாம். 19 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாயாகும். அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.