ராஜஸ்தான் மாநிலத்தில் பரம்வீர் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிகிதா பாடி (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மணமகனுக்கு பெண் வீட்டார் ரூ.5,51,000 ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்தனர். இதிலிருந்து பரம்வீர் ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தையும் தங்க நகைகளையும் அவர்களிடமே கொடுத்துவிட்டார். இது பற்றி பரம்வீர் கூறும் போது இந்த சமுதாயத்தில் வரதட்சனை கொடுப்பதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் அன்பாக கொடுப்பதால் அதனை என்னால் மறுக்க முடியாது என்பதால் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது போன்ற விஷயங்களுக்கு நாம் செய்வது ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் மணமகனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.