
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் மனிஷ் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவிக்கு ரயில்வேயில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு பாயின்ஸ் விமன் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு பதிலாக வேறொருவரை வைத்து தேர்வு எழுத வைத்து அந்த வேலையை தன்னுடைய மனைவிக்கு மனிஷ் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக ரயில்வே காவலர் ராஜேந்திரா என்பவருக்கு ரூ. 15 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த பணத்துக்காக தன்னுடைய விவசாய நிலத்தை அவர் அடமானம் வைத்து நிலையில் அவருடைய மனைவி வேலைக்கு சேர்ந்த 5 மாதத்தில் தன்னுடைய கணவர் வேலை இல்லாதவர் எனக் கூறி அவரைப் பிரிந்து சென்று விட்டார்.
தன்னுடைய மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனிஷ் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கு கடைசியில் சிபிஐ வசம் சென்ற நிலையில் அவருடைய மனைவி உஷாவை பணியிடை நீக்கம் செய்ததோடு இந்த மோசடிக்கு துணையாக இருந்த அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்தனர். ரயில்வே வேலைக்கு பெரிய மோசடி நடப்பது அம்பலமாகியுள்ளதால் சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.