தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் தகுதி இல்லாத பெண்கள் போலி ஆவணங்கள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கும் மேல், அரசு, வங்கி, வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்,விதவை மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது