தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களின் பட்டியல் ரெடியாகிவிட்டது.

மாதம் தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என்பதால், வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்காக பிரத்யேகமாக தயாராகி வரும் ATM கார்டு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.