தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நிராகரிப்பு தொடர்பாக குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலமாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு 1.6 கோடி பயனாளிகள் தகுதி பெற்றுள்ளனர். 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேல்முறையீடு செய்யும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.