
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தகுதியற்றவர்கள் என பலரும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேல் முறையீடு செய்ய அரசு அவகாசம் வழங்கியது.
அதன் பிறகு மேல் முறையீடு செய்ததில் தகுதியுள்ள பெண்கள் உரிமை தொகையை திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன்படி நவம்பர் மாதத்தில் 1.13 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளதால் டிசம்பர் மாதம் மொத்த பயணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.