இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். அதே நேரத்தில் அவருடைய தாயாரின் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஒரு நாள் மட்டும் அஸ்வின் போட்டியில் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, 500 ஆவது விக்கெட் வீழ்த்திய போது வீட்டில் இருந்து போன் வரும் என்று நான் காத்திருந்தேன். ஆனால் யாருமே கூப்பிடல. நானே என் மனைவிக்கு போன் செய்தபோது தான் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன்.

மிகவும் சோகமாக கலங்கி போய் அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக அழுது கொண்டிருந்தேன். என்னுடைய போன் ரீச் ஆகாத நிலையில் என் மனைவி அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு விஷயத்தை கூறினார். உடனே கேப்டன் ரோகித் மற்றும் கோச் ராகுல் டிராவிட்டுக்கு விஷயம் தெரிந்தது. உடனே அவர்கள் என்னுடைய பையுடன் வந்து இப்போது அம்மாவுடன் இருப்பது தான் முக்கியம் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

ரோகித் சர்மா மற்றும் புஜாரா மூலமாக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்ய நான் அம்மாவை வந்து சந்தித்தேன். பயணம் முழுவதும் என்னைப் பற்றி அறிய ரோகித் உடன் பயணித்த அணியின் பிசியோ கமலேஷை அழைத்துக் கொண்டே இருந்தார். ரோகித் தின் செயலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் விசேஷமானவர். கேப்டனாக அவர் ஏதாவது பெரிய சாதனையை படைக்க இறைவனைப் பிரார்த்திப்பேன் என அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார்.