
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கோயம்புத்தூரை நோக்கி நகர்ந்தது என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இது திடீரென திசை மாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, பெங்களூர் வழியாக மைசூருக்கு சென்று கொண்டிருப்பதாக தற்போது தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.