
ரோஹித்தை தடுப்பது மிகவும் கடினம்.. அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார்.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டி தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் தங்கள் பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா முதல் முறையாக இந்தியாவை வழிநடத்துவார், இந்த முறை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 81 ரன்கள் எடுத்து அசத்தினார். இதற்கிடையில், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே, ரோஹித் சர்மாவின் பேட்டிங்கைப் பாராட்டியுள்ளார்.
அதிக ரிஸ்க் எடுக்காமல் ரன் குவித்கும் ரோஹித் சர்மாவின் திறமை :
2023 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியாவும், இந்திய அணியும் அக்டோபர் 8 ஆம் தேதி சேப்பாக்கத்தில் போட்டியைத் தொடங்குகின்றன. உலகக் கோப்பைக்கு முன், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி, அதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பைக்கு முன்னதாக ஃபாக்ஸ் கிரிக்கெட்டிடம் (Fox cricket) பேசிய மார்னஸ் லாபுசாக்னே, அதிக ரிஸ்க் எடுக்காமல் ரன்களை குவித்த ரோஹித் ஷர்மாவின் திறனைப் பாராட்டினார்.

எதிர் அணியில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் :
“ரோகித் சர்மா எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சுதந்திரமாக ரன்கள் அடிக்கும் வீரர்” என்று மார்னஸ் லாபுஷாக்னே கூறினார். அவர் கூறியதாவது, ரோஹித் சர்மா எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் அற்புதமான ஷாட்களை ஆடுகிறார். பேட்டிங் செய்யும் போது மிகவும் சுதந்திரமாக இருக்கிறார். நகர ஆரம்பித்தவுடன் (ரிதத்தை பெற்றவுடன்), அவரை நிறுத்த கடினமாக உள்ளது. நாங்கள் பெவிலியன் நோக்கி நடந்தபோது (ரோஹித்துடன் நடக்கும்போது) நான் சொன்னேன், நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன், உங்களிடம் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இந்த சூழ்நிலையில் நீங்கள் சிறந்தவர். எதிர் அணியில் இருந்து கற்றுக்கொள்கிறீர்கள், அவர்கள் செய்யும் விதத்தில் இருந்து கற்றுக்கொள்கிறீர்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் கற்றுக்கொண்டு முன்னேற முயற்சிக்கிறோம்.
இந்தியா வந்தபோது, உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ரோஹித்திடம் கூறியதாக லபுஷ்சென்னே மேலும் கூறினார். இங்குள்ள நிலைமை எங்களுக்குத் தெரியாது, நீங்கள் இங்கு சிறந்த வீரர். இங்கு விளையாடிய அனுபவம் உங்களுக்கு அதிகம். எனவே போட்டியாளர்களாக இருப்பதன் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம் என்று ரோஹித்திடம் கூறியதாக லபுஷ்சென்னே கூறினார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் லாபுஷாக்னே மோசமான பார்மில் இருந்தார், ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, அவர் உலகக் கோப்பை அணியில் கடைசியாக இடம்பிடித்தார்.
Marnus Labuschagne said, "Rohit Sharma is someone who scored quite freely without taking any risks. He's very hard to stop once get going". (FOX cricket). pic.twitter.com/CSmyEJJkbM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 29, 2023