ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான  போட்டியில் லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முடிவில் லக்னோ  அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டை நோக்கி கோபத்தோடு பேசியதும்,  கை விரல்களை நீட்டியும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் ஆனது வீடியோவில் பதிவு ஆகி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2025 ஆம் வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா ரிஷப் பண்டை 27 கோடிக்கு வாங்கினார். பின்பு அவரையே அணியின் கேப்டன் ஆகவும் நியமித்தார். ஆனால் இதுவரை பல  போட்டிகளில் பண்ட் சொதப்பி வருகிறார்.

கேப்டன் ஆக மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் பஞ்சாப் அணியின் கேப்டன் சுரேஷ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் போட்டி முடிந்ததும் சஞ்சய்  கோயங்கா நேராக மைதானத்திற்கு சென்று சுரேஷ் ஐயரை கட்டி அணைத்து பேசி உள்ளார். மேலும் ரிஷப் பண்டை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசி உள்ளார் .இதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.  அடுத்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் எடுக்க கோயங்கோ அழைப்பு விடுக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.