மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், காதலியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட மனமுறிவால், 19 வயதான அப்துல் சமத் என்ற இளைஞர், 18 வயது லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வேலை செய்தபோது சந்தித்த இவர்கள், தொடர்ச்சியாக செல்போனில் தொடர்பில் இருந்தனர். லட்சுமி தனது பழைய மொபைல் பழுதடைந்ததாக கூறியதை அடுத்து, ஏப்ரல் 21 அன்று ஜபல்பூருக்கு வந்த அப்துல், புதிய மொபைலை பரிசளித்துவிட்டு பழைய மொபைலை எடுத்துச் சென்றார். அந்த மொபைலில் ஒருவர் ஞாயிறு முதல் ஞாயிறு வரை மணிக்கணக்கில் பேசியிருப்பதைப் பார்த்ததும் அப்துல் கடும் கோபத்திற்கு ஆளானதாக காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மே 9 அன்று மதியம், லட்சுமி இயற்கை உபாதை கழிக்கச் செல்கிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் உண்மையில், கோவிலின் அருகே உள்ள தேவ்தால் மலைப்பகுதிக்கு அப்துலை சந்திக்கச் சென்றார். அங்கு, மனமாற்றமாக இனிப்புகள் கொண்டு வந்து, இனிமேல் வேறு யாருடனும் பேசமாட்டேன் என சத்தியம் செய் எனக் கேட்ட அப்துல், லட்சுமி பதிலளிக்காததால் கோபமடைந்து, அவரை பலமுறை கத்தியால் குத்தினார். இதில் அவரது கழுத்திலும் உடலிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பத்தினர் தேடிச்சென்ற போது, 200 மீட்டர் தொலைவில் இரத்த வெள்ளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்துக்குப் பிறகு, லட்சுமியின் கைப்பேசியில் இருந்து கொலைக்குச் சிறிது நேரம் முன் அப்துலுடன் நடந்த அழைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன. அதன் பிறகு அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதையடுத்து, போலீசார் தொழில்நுட்ப அடிப்படையில் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து, கைது செய்தனர். விசாரணையில், “நான் அவளை காதலித்தேன். ஆனால் அவள் எனக்கு  துரோகம் செய்தார். அதனால் திட்டமிட்டு கொன்றேன்” என அப்துல் கூறியுள்ளார். குற்றவாளி தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.