நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் பிரகாசம்-கவிதா (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கவிதா ஒரு அங்கன்வாடி வையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுடைய ஒரே மகள் கீர்த்தி வாசினி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி பொது தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று ரிசல்ட் வெளியானது. ஆனால் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோமோ என்ற பயத்தில் நேற்று அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி துடித்த நிலையில் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி 500-க்கு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த மாணவி தமிழில் 70 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்களும், கணிதத்தில் 81 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 70 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 44 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். மேலும் மொத்தமாக 348 மார்க் எடுத்து இந்த மாணவி தேர்ச்சி பெற்ற நிலையில் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.