ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸ் சிக்ஸரால் அடித்து தங்களது கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்த நிலையில், பிரபல போர்ன் ஸ்டார் கேந்திரா ரிங்கு தி கிங்’ என்று பாராட்டியுள்ளார்..

ஒவ்வொரு  டெத் பவுலரும் மிரளும் அளவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஏப்ரல் 9 அன்று ஒரு சாதனையை செய்தார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சாத்தியமில்லாத வெற்றியை ரின்கு சிங் சாத்தியமாக்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் அணிக்கு கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் கொடுக்கப்பட்டது. இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங், யாஷ் தயாளின் இந்த 5 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணிக்கு மறக்க முடியாத வெற்றியைக் கொடுத்தார்.

25 வயதான ரின்கு சிங்கின் அபாரமான இன்னிங்ஸைக் கண்டு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இந்த இளம் பேட்ஸ்மேனைப் புகழ்ந்து பாராட்டி  வருகின்றனர். இந்த பட்டியலில் அமெரிக்க போர்ன் ஸ்டார் கேந்திரா லஸ்டின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆம், ரிங்கு சிங்குடன் போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ள கேந்திரா, ‘ரிங்கு தி கிங்’ என்று எழுதினார். அமெரிக்க போர்ன் ஸ்டாரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.