ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டர் சைக்கிளில் புதிதாக இரண்டு நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மிலிட்டரி சில்வர் ரேட் மற்றும் மிலிட்டரி சில்வர் பிளாக் என இரண்டு புதிய நிறங்கள் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை 1,79,000 ஆகும் மற்ற ஸ்டாண்டர்ட் நிறங்களை விட 6000 ரூபாய் வரை இது அதிகம் என்று கூறப்படுகிறது.

புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் மாடலில் வேறு எந்த மாற்றமும் கிடையாது என்று கூறப்படுகிறது. புதிய இரண்டு நிறங்களை சேர்த்து புல்லட் 350 மாடல் மிலிட்டரி ரேட், மிலிட்டரி பிளாக், ஸ்டாண்டர்ட் மரூன், ஸ்டாண்டர்ட் பிளாக் மற்றும் பிளாக் கோல்ட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.