ஹீரோ மோட்டோகார்ப் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சர்ஜ் என்ற ஸ்டாட் அப் மூன்று சக்கர ரிக்ஷாவில் இருந்து மின் ஸ்கூட்டராக மாறும் வகையிலான S32 என்ற மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது.இந்த எலக்ட்ரிக் வாகனமானது கிறிஸ்டோபர் நோலனின் ‘தி டார்க் நைட்’ இருந்து ‘பேட்மொபைல்’ மூலம் இன்ஸபிரேசனாக உருவாக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும்போது இதனை சரக்கு வாகனமாகவும் ஆற்றல் கொண்ட ஸ்கூட்டராகவும் மாற்றிக் கொள்ளலாம். இவை இரண்டுக்கும் இடையே உள்ள S32 என்ற ஆப்ஷனை பயன்படுத்தி எளிதாக மாற்றலாம். இதன் பேட்டரி திறன் 11 kWh ஆகும். அதிகபட்ச வேகம் 50 கிலோமீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் ஆகும் . மேலும் 500 கிலோ சுமையை சுமக்கும் திறன் கொண்டது. இதன் விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது