அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு பலருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கும்பாபிஷேகம் முடிந்து மற்றொரு நாளில் குடும்பத்தினருடன் ராமர் கோயிலுக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

கும்பாபிஷேகம் தொடர்பாக கடிதம் வந்தது. ஆனால் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அழைப்பிதழ் எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.