உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இங்கு இந்து அமைப்பினர் ராமநவமி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  திடீரென அவர்கள் மசூதியில் மீது ஏறி அங்கு காவிக்கொடிகளை அசைத்து அட்டகாசம் செய்தனர். அதாவது ராமநவமியை முன்னிட்டு அவர்கள் பைக் பேரணி சென்றனர். அவர்கள் பேரணி செல்லும் வழியில் சையத் சலார் ஷாஜித் என்ற மசூதி இருந்தது.

 

உடனடியாக அங்கு பைக்கை நிறுத்தி அவர்கள் திடீரென மசூதியின் மீது ஏறி காவி கொடியை ஏற்றி அட்டூழியம் செய்தனர். அதோடு ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கத்தையும் எழுப்பினர். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியும் ஒரு மசூதியில் பச்சைக்கொடியை அகற்றி வைத்து அங்கு காவி கொடியை ஒரு நபர் ஏற்றினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதைத் தொடர்ந்து நேற்று நடந்த சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.