தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பற்றி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகுந்த மனவேதனையான ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதாவது ராணுவ வீரர்களுக்கு அனைவருமே பெரிய அளவில் சம்பளம் இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் அந்த சிந்தனையை தற்போது அமரன் திரைப்படம் மாற்றியுள்ளது. இந்த படத்தில் சொத்து வாங்கும் காட்சி ஒன்று இடம்பெற்று ராணுவ வீரர்களின் கஷ்டத்தை வெளிக்காட்டி உள்ளது. இந்த காட்சியை மேற்கோள் காட்டி கூறிய  விக்னேஷ் சிவன் இனி ராணுவ வீரர்களின் சம்பளம் 100 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதற்காக முதல் ஆளாக தான் பங்களிக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.