
இணையதளங்களில் விலங்குகள், மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்குவது, சில சமயங்களில் கொடூரமான விலங்குகளும், மனிதர்களிடம் செல்லப் பிராணி போல பழகுவது போன்ற அதிசயப்படுத்தும் வீடியோக்கள் வைரல் ஆவதுண்டு. அதேபோல அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் அமெரிக்க ராட்சத முதலைக்கு எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் தனது வெறும் கைகளால் உணவு வழங்குகிறார். அதனை முதலை அமைதியாக வந்து வாங்கி உட்கொள்கிறது. பின்னர் நீரினுள் செல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும்கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.