காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு பல கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதானி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையில் ராகுல்காந்தி மீது கூடுதலாக 10 அவதூறு வழக்குகளானது நிலுவையில் இருக்கிறது. அதே சமயத்தில் ராகுல் காந்தி தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது ஒரு அவதூறு வழக்கு கூட பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.