பிரிக்ஸ் கூட்டமைப்பு ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு உருவாக்கிய அமைப்பு ஆகும். கடந்த 2019 இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைந்தது. இந்த நிலையில் 16 வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் இருக்கும் காசான் நகரில் இன்றும் நாளையும் விமர்சையாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு சென்றார்.

மாநாட்டிற்கு இடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் மோடி கலந்துரையாடினார். முன்னதாக விமான நிலையத்தில் ரசிகர்களின் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களை பாடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.