
அமெரிக்காவில் நோட்டோ அமைப்பின் 75வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நோட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நோட்டோவின் 32 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களை ஆலோசித்தனர். இந்த மாநாட்டின் நிறைவில் 32 தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீனா அரசின் விருப்பங்கள் மற்றும் கட்டாயக் கொள்கைகள் தொடர்ந்து நமது நலன்கள் பாதுகாப்பு மற்றும் மதிப்புகளுக்கு சவாலாக உள்ளது. உக்கரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவியாளராக சீனா இயங்குகிறது. அதோடு ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கான தேவையான ராணுவ பொருட்களை சீனா வாரி வழங்கி வருகிறது.
ஐ.நா பாதுகாப்பு நிரந்தர உறுப்பினரான சீனா, அதன் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும். எனவே ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு வழங்கும் பொருள்கள் மற்றும் அரசியல் ஆதரவை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இருந்தது. இதனிடையே நோட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, நோட்டாவுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.