
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் வழங்கினார். அதாவது ரயில்வே நிலையங்களில் கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனிலும் ரத்து செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். பொதுவாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால் அந்த டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்து கொள்ளலாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் தற்போது கவுண்டரில் டிக்கெட் எடுத்தால் கூட அதனை ஆன்லைனில் ரத்து செய்து கொள்ளலாம் என்று மத்திய மந்திரி உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். மேலும் ரத்து செய்த அசல் டிக்கெட்டை டிக்கெட் கவுண்டரில் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.