இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ரயில் பயணிகளுக்கான விதிகளை கடுமையாக்கி ரயில்வே நிர்வாகம் புதிய தகவலை அறிவித்துள்ளது. அதன்படி ரயில்களில் ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் உரிய முன்பதிவு டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க வேண்டும். காத்திருப்பு பட்டியலில் இருப்போர் பயணித்தால் அபராதம் விதித்து அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடப்படுவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.