இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளுக்காக ரயில்வே துறை சார்பாக பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது டிக்கெட் முன்பதிவு, ரயிலில் படுக்கை வசதி மற்றும் தண்ணீர் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்துகள் எளிய முறையில் கிடைக்கும் விதமாக மருந்தகம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விநியோகிக்கும் விதமாக மக்கள் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலமாக வெளிச்சந்தைகளில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மருந்துகள் மக்கள் மருந்தாகத்தில் 400 முதல் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த மக்கள் மருந்தகம் ரயில் நிலையங்களில் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஐம்பது ரயில் நிலையங்களில் இந்த மக்கள் மருந்தகம் கொண்டு வரப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.