ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் ஐ ஆர் சி டி சி சார்பாக கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் ஐந்து ரயில் நிலையங்களிலும், திருச்சி கோட்டம் மூன்று, சேலம் கோட்டம் – 4, மதுரை கோட்டம் – 2, பாலக்காடு கோட்டம் – 9, திருவனந்தபுரம் கோட்டம் – 11 என தெற்கு ரயில்வே சார்பாக முதல் கட்டமாக 34 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டம் ஏப்ரல் 17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 200 கிராம் எடையில் எலுமிச்சை, புளியோதரை, தயிர் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ஒன்று எகனாமி மீல்ஸ் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது .

அதனைப் போலவே 325 கிராம் இடையில் பூரி மசால் மற்றும் பஜ்ஜி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 350 கிராம் இடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் ஸ்னாக் மீன் என்ற பெயரில் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 200 மில்லி லிட்டர் தண்ணீர் பாட்டில் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பயணிகள் இதனை எளிதில் அணுகுவதை உறுதி செய்ய முன் பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளுக்கு அருகே நடை மேடையில் இதற்கான கவுண்டர்கள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.