தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள் குறையவில்லை என நீதிமன்றம் கூறியது.

அதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது, இனி எத்தனை பேருந்துகளில் பொருத்தலாம் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழகத்தின் உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை செயலர் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.