
பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது.
ரயில் சென்று முடிந்ததும் அந்த நபர் மீண்டும் எழுந்து எந்த ஒரு காயமும் இன்றி நடந்து செல்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
https://x.com/TheSouthfirst/status/1871434827347755025