இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.

இந்த நிலையில் ரயில்களில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் பயணிப்பதால் பயணிப்பவர்களுக்கு சரியான விலையில் தரமான உணவு வழங்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதையும் மீறி சில நேரங்களில் தரம் இல்லாத உணவுகள் வழங்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து ரயில்வேக்கு தொலைபேசியில் புகார் அளிக்கலாம். 1323 அல்லது 138 என்ற எண்ணிலோ, 1800111139 மற்றும் 1800111321 என்ற எண்களிலோ புகார் அளிக்கலாம்.