
சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஓடும் ரயிலில் ஒரு ஆண் பயணிக்கு மற்றொரு ஆண் பயணி முத்தம் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த ஆண் பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் அதனை தடுக்க முயற்சித்தார்.
இருப்பினும் அந்த வாலிபர் அவரை விடாது கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். உடனடியாக சக பயணிகள் அந்த வாலிபரை தடுத்தனர். அந்த வாலிபரிடம் அந்த நபரின் மனைவி சண்டை இடுகிறார். இருப்பினும் அந்த வாலிபர் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால் அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டதோடு தொடர்ந்து முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது சரிவர தெரியவில்லை.
View this post on Instagram