இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணத்தை தொடரும் வகையில் முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்யும் சீட்டுகளில் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகள் வந்து ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி முன்பதிவு செய்த பயணிகளின் பெட்டியில் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் வந்து ஆக்கிரமிப்பு செய்தால் இதன் மூலம் பயணிகள் புகார் அளிக்கலாம். இந்த செயலை தற்போது சோதனை முறையில் உள்ள நிலையில் கூடிய விரைவில் ப்ளே ஸ்டோர் மூலமாக ரயில் பயணிகள் இந்த செயலியை பெறலாம். இவ்வாறு செயலியின் மூலம் புகார் அளிக்கப்பட்டதும் ரயில் டிக்கெட் பரிசோதகர் மூலம் புக்கிங் ஆகாத பயணிகள் ரயிலிலிருந்து இறக்கி விடப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.