
ஆதார் கார்டு போலவே பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. பான் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டை பான் கார்டு இணைத்து இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு கோடிக்கணக்கான பான் கார்டு ரத்து செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சில விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக அந்த பான் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
அவ்வாறு ரத்து செய்யப்பட்ட பான் கார்டு மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு வருமான வரித் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட AO-க்கு (மதிப்பீட்டு அதிகாரி) நீங்கள் எழுதி கடிதம் அனுப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை கடிதத்தோடு இணைக்க வேண்டும். இதனோடு செயலில் உள்ள பான் எண்ணிற்கு கடந்த மூன்று வருட வருமானவரி கணக்கின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். கடிதத்தை சமர்ப்பித்த பிறகு பான் காடு மீண்டும் செயல்படுத்த குறைந்தது பத்து முதல் 15 நாட்கள் ஆகும். உங்களுடைய பான் கார்டு செயல்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டும் .விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரி பார்க்க வேண்டும்.