உள்நாட்டுப் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உயர்த்தியுள்ள்ளார்..

உள்நாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்து பிசிசிஐ வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இனிமேல், உள்நாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுடன் சேர்ந்து அனைத்து அணிகளுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேசியப் போட்டிகளின் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபி உள்ளிட்ட மகளிர் உள்நாட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பரிசுத் தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை வென்ற அணிக்கு தற்போது ரூ. 2 கோடி பரிசுத் தொகை ரூ. 5 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த ரூ 1 கோடி பரிசுத்தொகை ரூ. 3 கோடி பரிசுத் தொகையாக  வழங்கப்படும். ரஞ்சி கோப்பையின் அரையிறுதியில் தோல்வியடையும் அணிக்கு ரூ. ஒரு கோடி வழங்கப்படும்.

இராணிக்கோப்பை தொடரில் வெற்றிபெறும் அணிக்கு ரூ 50 லட்சமும், ரன்னர் அப் அணிக்கு ரூ 25 லட்சமும் வழங்கப்படும். துலீப் டிராபி வெற்றியாளருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். ரன்னர் அப் அணிக்கு  50 லட்சமும், விஜய் ஹசாரே கோப்பை வென்ற அணிக்கு ரூ 1 கோடியும், 50 லட்சமும், ரன்னர்-அப் அணிக்கு ரூ.50 லட்சமும், தியோதர் டிராபி வெற்றியாளருக்கு ரூ 40 லட்சமும், ரன்னர்-அப் அணிக்கு 20 லட்சம் வழங்கப்படும்.

சையது முஷ்டாக் அலி கோப்பை வெல்லும் அணிக்கு  ரூ. 80 லட்சமும், ரன்னர் -அப்  அணிக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தேஷ்வாலி மகளிர் ஒரு நாள் கோப்பை (மூத்தோர்) பரிசுத் தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரன்னர் -அப் அணிக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். மேலும் மகளிர் டி20 கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 40 லட்சமும், 2ஆம் இடம் (ரன்னர் -அப்) பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் வழங்கப்படும்.