இளையராஜா பயோபிக் படப்பிடிப்பின் தொடக்கத்தில் ரஜினியின் பயோபிக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினி அதற்கு நோ சொல்லியுள்ளார் என தகவல்கள் பரவி வருகிறது. தனுஷூக்கு முன்பே வேறொரு இயக்குநர் நடிகர் ரஜினியின் பயோபிக் எடுக்க வேண்டும் என அவரை அணுகி இருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த், “பயோபிக் என்றால் அதில் எல்லா உண்மைகளையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அதற்கு உண்மையான அர்த்தம் இருக்கும்.

என் வாழ்வின் எல்லா உண்மைகளையும் நான் சொன்னால் மக்கள் என்னை வெறுத்துடுவாங்க. அதனால எப்பவும் என்னுடைய பயோபிக் வேண்டாம்” என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் லால் சலாம் இசை வெளியீட்டின்போது தனுஷ் எனக்கு ஒரு கதை சொல்லியிருந்தார் அது பண்ண முடியாமல் போயிருந்தது என கூறியிருந்தார் ரஜினி.