18வது ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பும்  போட்டியாக ஐபில் உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியின் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடுகிறார்கள்.

சென்னை, மும்பை , டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் போட்டி நடைபெறுகிறது.  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கும் இந்த தொடரானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடிகை திரிஷா பதாணி, பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், கரன் ஆஜ்லா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளோடு தற்போது கோலாகலமாக தொடங்கியது.