விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை என்ற சீரியல் தற்போது புது புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மீனாவின் நகையைத் திருடி மனோஜ் தற்போது மாட்டிக்கொண்ட நிலையில் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான வெற்றி வசந்த் பெயரில் சமூக வலைத்தளங்களில் மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், நான் ஆரம்பத்தில் பேஸ்புக்கில் இருந்தேன், அப்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டேன், ஆனால் அதன் பிறகு என்னுடைய அக்கவுண்டில் இருந்து புகைப்படங்களை எடுத்துவிட்டு நான் அந்த அக்கவுண்ட்டை லாக் செய்து விட்டேன். ஆனால் என்னைப் போலவே யாரோ ஒருவர் அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் பேசி வரும் நிலையில் அது எனக்கு தெரிய வந்தது. நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே உள்ளேன், யாரும் போலி அக்கவுண்டை நம்ப வேண்டாம் என்று அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vetri Vasanth R இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_vetri_vasanth_r)