
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திமுக அமைச்சர் த.மோ அன்பரசன் நடிகர் விஜயை விமர்சித்துள்ளார். அதாவது நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரசிகர்களுக்கு விஜய் இலவச டிக்கெட் கொடுக்கவில்லை எனவும் ரூ.2000-க்கு மேல் டிக்கெட் விற்பவர்களால் எப்படி நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் இதற்கு முன்னதாக கூட்டத்தை பார்த்துவிட்டு அனைவரும் அரசியலுக்கு வராங்க. அவர்களுக்கு அறிவு இருக்குமானு தெரியல. கட்சி நடத்துறது என்ன சாதாரண விஷயமா. சினிமாவில் இருந்து வந்த முதல்வர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் முடிந்து விட்டது. இது தெரியாமல் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.