
திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை பாஜக என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜர். அவர் முதல்வர் ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆடுகிறார். பாஜக மற்றும் திமுக என்ற இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பது விவாத பொருளாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் பேச்சை கேட்டு தான் பாஜக பொதுக்கூட்டம் நடந்த மேடையை அண்ணாமலை அசிங்கப்படுத்தியுள்ளார்.
அதன்பிறகு ரகசியம் பேசுவதற்காக தான் ஸ்டாலினும் அண்ணாமலையும் டூர் போவதாக கூறினார். தமிழ்நாட்டில் நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால் இருவரும் வெளிநாட்டில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்பதற்காக ஒன்றாக செல்கிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு ரஜினி துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் ரஜினி வைத்து துரைமுருகனை மட்டம் தட்டி விட்டதாக தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் இன்று முதலீடுகளை ஈர்க அமெரிக்கா செல்லும் நிலையில் நாளை அண்ணாமலை லண்டனுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.