1971-ல் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெரும் வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) 90,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைய வைக்கப்பட்டனர். அப்போது இந்தியாவிடம் ரஃபேல், எஸ்-400 போன்ற நவீன ஆயுதங்கள் இல்லை.

அப்போதைய பிரதமர்  இந்திரா காந்தியின்  புத்திசாலித்தனமான திட்டமும், இராணுவத்தின் ஒருங்கிணைப்பும் இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இணையத்தில் பரவும் வீடியோக்கள், இந்த சாதனையை இந்திரா காந்தியின் சிறந்த ஆளுமை என கூறி புகழ்கின்றனர்.

இன்று, மோடி அரசின் கீழ் இந்திய இராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள், எஸ்-400 ஏவுகணை அமைப்புகள், தேஜாஸ் போர் விமானங்கள் போன்றவை இந்தியாவின் பலத்தை கூட்டியுள்ளன. மோடியின் ஆதரவாளர்கள், இந்த ஆயுதங்கள் இந்தியாவை பாகிஸ்தான், சீனா போன்றவற்றுக்கு எதிராக வலுவாக்கியுள்ளதாக கூறுகின்றனர். இதை முன்னிலைப்படுத்தி, இணையத்தில் மோடிக்கு ஆதரவான வீடியோக்கள் பரவுகின்றன.

இந்த இரு காலகட்டங்களையும் ஒப்பிடுவது கடினம். 1971-ல் இந்திரா, எளிய ஆயுதங்களுடன் வரலாற்று வெற்றியை பெற்றார். 2025-ல் மோடி, நவீன ஆயுதங்களுடன் இராணுவத்தை வலுப்படுத்தியுள்ளார்.இணைய வீடியோக்கள் இவர்களை போட்டியாக காட்டினாலும், இந்தியாவின் உண்மையான வெற்றி அமைதியிலும் முன்னேற்றத்திலும் உள்ளது என போரை விரும்பாத நபர்கள் மற்றொருபுறம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.