பீகார் மாநிலத்தில் சீதாமர்ஹி‌ என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை விஜயதசமி பண்டிகை நடைபெற்றது. அந்த விழாவில் பாஜக கட்சியின் எம்எல்ஏ மிதிலேஷ் குமார் என்பவர் கலந்து கொண்டார். அவர் விழாவில் கலந்து கொண்ட சிறுமிகள் அனைவருக்கும் வாள் வழங்கினார். அதன் பின் அவர் பேசும்போது எங்கள் சகோதரிகளை தீயவர்கள் தவறான நோக்கில் தொட நினைத்தால் அவர்கள் இந்த வாளால் வெட்டி வீசப்படுவார்கள். யாராவது தவறான நோக்கத்தில் தொட்டால் அவர்களின் கைகளை வெட்டி வீச வேண்டும்.

நம் சகோதரிகளை கைகளை வெட்டும் அளவுக்கு உருவாக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் நான் மட்டுமல்ல நாம் அனைவரும் இதனை செய்ய வேண்டும். மேலும் தீய எண்ணம் கொண்ட அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதோடு விஜயதசமி விழாவின்போது வாள்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்த அவர் வணங்கியதோடு தன்னுடைய முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நவராத்திரி திருவிழாவின் போது ஆயுதங்களை வைத்து வழிபடுவது இந்து சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.