
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் தரப்பு அளித்த புகாரை தொடர்ந்து,சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.