ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நடிகரும் எம்எல்ஏவும் ஆன பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பேசினார். அப்போது பாலகிருஷ்ணன் நீங்கள் எம்.எஸ் தோனியை போன்று ஒரு தலைவர். நான் விராட் கோலியை போன்ற ஒரு வீரர் என்று கூறினார்.

அதற்கு சந்திரபாபு நாயுடு எனக்கு எப்போதும் விராட் கோலியை தான் பிடிக்கும் என்றார். மேலும் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் கோலியா அல்லது தோனியா இருவரில் யார் சிறந்தவர்கள் என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள்.