
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங் என்பவர் காரில் வந்துள்ளார். இவருக்கு 38 வயது ஆகும் நிலையில் மாணவியிடம் காரில் கொண்டு பள்ளியில் விடுவதாக கூறியுள்ளார். அந்த மாணவியும் தெரிந்தவர் தானே என நம்பி காரில் ஏறிய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர் காரை ஓட்டி சென்றார்.
பின்னர் மாணவிக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் பள்ளியின் அருகே தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். மாலை நேரமாகியும் மாணவி வீட்டில் திரும்பாததால் பெற்றோர் தேடி சென்ற நிலையில் மயங்கி நிலையில் தன் மகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவியை மீட்டு விசாரணை நடத்தியதில் அவர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தன் தாயிடம் கூறி கதறி அழுதார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாய் புகார் கொடுக்கவே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.