இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கும். குறிப்பாக காட்டு விலங்குகளின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வை ஏற்படுத்தும்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வரிக்குதிரையின் குட்டி ஒன்றை சிங்கம் வேட்டையாட முயற்சிக்கிறது. இதனை எங்கிருந்தோ பார்த்த தாய் வரிக்குதிரை மின்னல் வேகத்தில் வந்து சிங்கத்தை துவம்சம் செய்துள்ளது. மேலும் தன்னுடைய குட்டியை சாமர்த்தியமாக காப்பாற்றி இறுதியில் தன்னுடைய கால்களால் உதைத்தும் சிங்கத்தை தள்ளி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.