டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர்
செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இந்த வருவாய் குறைவுதான். மது விலை உயர்வால்தான் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் மதுபான கடைகள் செயல்படுவது போலவும், மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சூழலை போலவும் பேசுகிறார்கள்.

கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதுபான கடைகள் மூடினார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கிற கர்நாடகாவில் ஒருநாள் கூட கூட மூடவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கூடுதல் நேரத்தில் விற்பனை செய்யப்பட்டது. அங்கே என்ன விலைக்கு விற்கிறது? எவ்வளவு பாட்டில்கள் இருக்கிறது? எவ்வளவு பேர் குடிக்கிறார்கள்? எவ்வளவு வருமானம் வருகிறது? இந்தியாவில் இருக்கக்கூடிய பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் டாஸ்மாக்கில் எவ்வளவு வருவாய் என்பதை தெரிந்து கொண்டு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும் என விளக்கமளித்தார்.