தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுபவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இன, மத, ஜாதிக்கு எதிரான உள்ளடக்கம், பொய் பிரசாரம், சரி பார்க்கப்படாத செய்திகள், தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள், வன்முறையை தூண்டும் செய்திகள், ஆபாச செய்திகள் மற்றும் தவறான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.