
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் GOAT திரைப்படம் தயாராகி வருகிறது. விஜயின் கேரியரில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் GOAT திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் ரெட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் விஜய், பிரசாந்த் மொத காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படம் ஆனது தாய்லாந்து, துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சூட்டிங் செய்யப்பட்டது. ஆனால் இந்த காட்சி எங்கு படமாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பார்வையாளராக இருந்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவானது பட குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.