
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தற்போது ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஒரு 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அதனை நோட்டம் விட்ட தமிழ்ச்செல்வன் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர் கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் அத்துமீறிய நிலையில் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்ததும் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.